தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு என்ன?
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அடுக்கடுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக கல்வித்துறை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் கலாசார பாதுகாப்புக்கும் பல்வேறு அறிவிப்புகள் அறிaவிக்கப்பட்டுள்ளன. 600க்கும் அதிகமான புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கலாசாரம் மற்றும் கல்வி அறிவு மேம்படும் என்று கூறப்படுகிறது.
ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் அரசு மொத்தம் 8 லடசம் வீடுகளை கட்ட முடிவெடுத்துள்ளது. ஒவ்வொரு வீடும் தலா 3.5 லட்சம் ரூபாயாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாயும்கீ ழடி அகழாய்வுக்கு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் மதிப்பில் 5ஆயிரம் ஏரிகள் மற்றும் குளங்களை மீட்டெடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட 365 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகரில் தனியார் பங்களிப்புடன் திரைப்பட நகரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாறு நதியை தூய்மை படுத்த 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் வடசென்னையை அழகுபடுத்த 1100 கோடி ரூபாயும், கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைவாழ் பெண்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு இலவச பேருந்து சேவைகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. திருநர் சமூகத்தினருக்கு சென்னை, கோவை, மதுரையில் விடுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவரின் படிப்பு செலவுகளை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.