எதெல்லாம் விக்கலாம் கணக்கு கேட்கிறது அரசு…
பொதுத்துறை நிறுவனங்களை அதிகரித்த காலம் போய், தற்போது எதெல்லாம் பொதுத்துறையில் கிடக்கிறதோ அதையெல்லாம் விற்றுத்தள்ளும் அவலம் நிலவுகிறது. இந்த வரிசையில் பல ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு சொந்தமான BSNL,MTNL நிறுவன சொத்துகளை விற்று அதனை பணமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களையும் மீட்டெடுக்க 1.64டிரில்லியன் நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும் இருப்பதிலேயே எந்த சொத்து குறைவான மதிப்பு கொண்டதோ அதையெல்லாம் விற்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக , எதையெல்லாம் விற்கலாம் என்று அந்த இரண்டு நிறுவன அதிகாரிகளுக்கும் தொலை தொடர்புத்துறை கேட்டுள்ளது. 10 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள சொத்துகள் எவை என்பதை கண்டுபிடித்து அதனை விற்க அரசாங்கம் தீவிர முயற்சி செய்து வருகிறது.இதுபோல 10 இடங்களை விற்கவும் அரசு முயற்சிக்கிறது. என்னதான் நிதி உதவி அளித்தாலும் வாங்கிய கடனை அடைக்க, எதையாவது விற்று பணத்தை அடைக்க வேண்டும் என்பதிலும் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. 3 மாதங்களில் விற்க வேண்டிய சொத்துகளை காட்டும்படி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் 9 இடங்களை 50 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டது. 10 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள சொத்துகளை விற்க அமைச்சரக ஒப்புதல் தேவையில்லை என்பதால் அந்தந்த மேலாளர்களே முடிவெடுக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். MTNLநிறுவனத்தின் சொத்து மட்டும் 30ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த இரண்டு சொத்துகளையும் வி்ற்று பணமாக்க அரசாங்கம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.