ஒரு பங்கில் Margin of safety ஏன் முக்கியம்?திரு. ஆனந்த் ஶ்ரீனிவாசனின் விளக்கம் இதோ!!!
பங்குச்சந்தையில் உயர்வான விதி: பாதுகாப்பான மார்ஜின் அம்சம் முக்கியம்பாதுகாப்பு முக்கியம் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். உங்கள் முதலீட்டின் முக்கியமான உத்தியாக இதனை நீங்கள் பார்க்க வேண்டும். பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மையில் இருந்து தற்காத்துக் கொள்ள தற்காப்பு அம்சம் மிகவும் முக்கியம். சந்தை மதிப்பு மற்றும் ஒரு பங்கின் மதிப்புக்கு இடையே ஒரு முக்கிய அம்சமாக பாதுகாப்பு அம்சம் திகழும். பாதுகாப்பான விலை வித்தியாசம் (மார்ஜின்) கொண்ட பங்குகள் வாங்கப்படும் போது அது முதலீட்டாளர்களை இழப்பில் இருந்து தடுப்பதுடன், நெடுங்கால வெற்றிக்கும் வித்திடுகிறது. பாதுகாப்பான மார்ஜின் என்பதை தேர்வு செய்வது என்பது பெரிய ஏற்ற, இறக்கம் சந்தையில் நிலவும் போதும்,அச்சத்தை தடுக்கும். அவ்வாறு பெரிய ஏற்ற, இறக்கம் இருக்கும் போது,ஒரு பங்கின் உண்மையான மதிப்பில் இருந்து விலகிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. உண்மையான மதிப்பு என்ன என்பதை ஆராய வேண்டும், அதாவது ஒரு நிறுவனத்தின் சொத்துகள் என்ன, எவ்வளவு லாபம் ஈட்டி இருக்கின்றன, நிறுவனத்தின் வளர்ச்சி என்ன, நிறுவனம் எந்த நிலையில் உள்ளன என்பதை முதலீடு செய்யும் முன் ஆராய்வது அவசியம். பாதுகாப்பு உணர்வுடன் கூடிய முதலீடுகள் எல்லா நேரங்களிலும் கைகொடுப்பது இல்லை. பங்குச்சந்தைகள் என்பது அதீத ஏற்றத்தாழ்வுகளை கொண்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பான மார்ஜினை தேர்வு செய்யும் முதலீட்டாளர் சிறந்த பங்குகளை எளிதாக வாங்கிக் கொள்ள வாய்ப்பு உருவாகிறது. அதோடு எதிர்பார்த்த ரிட்டன்ஸும் நமக்கு கிடைக்க வகை செய்கிறது. ஓரளவுக்கு சமாளிக்கும் அளவுக்கு உள்ள மார்ஜின்கள் என்பது உங்கள் முதலீட்டு இலக்குகளை எட்ட உதவும். உதாரணமாக, கர்நாடகா வங்கி பங்குகளை எடுத்துக் கொள்ளுங்கள், ஜுன் 2020-இல் இந்த வங்கியின் ஒரு பங்கின் விலை 35 ரூபாயாக இருந்தது. அதை அப்போது வாங்கியிருந்தால் தற்போது அதன் விலை 154 ரூபாயாக உள்ளது. இந்த ஒரு பங்கு சீரான இடைவெளியில் டிவிடன்ட்களை வழங்கி வருகிறது. ஒரு பங்குக்கு 5 ரூபாய் கிடைத்திருக்கிறது. அதுவும் வெறும் 2 ஆண்டுகளில். இதே டிவிடண்ட்டாக 23 நிதியாண்டிலும் ஒரு டிவிடன்ட் கிடைக்க இருக்கிறது. குறிப்பிட்ட இந்த பங்கில் பாதுகாப்பான மார்ஜின் அம்சத்தை நாம் ஆராய வேண்டும். இந்த பங்கின் புத்தக மதிப்பு என்பது 228 ரூபாயாக இருக்கிறது. இதன் இன்ட்ரின்சிக் மதிப்பு என்பது 339 ரூபாய். இதில் பாதுகாப்பான மார்ஜின் மிகக் கச்சிதமாக வேலை செய்துள்ளது. அதாவது, தற்போதைய மதிப்புப்படி 154 ரூபாய் ஒரு பங்கின் சந்தை மதிப்பு இருந்தாலும், பாதுகாப்பான மார்ஜின் 185 ரூபாயாகும். அதாவது இந்த மதிப்பு என்பது இன்ட்ரின்சிக் மதிப்பை விட குறிப்பிடத் தகுந்த தள்ளுபடி விலையை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.185 ரூபாய் பாதுகாப்பான மார்ஜின் என்பது முதலீட்டாளர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் போட்ட முதலீடுகள் வருவாயாக திரும்பக் கிடைக்கும் போது அதனை வைத்து மற்றொரு பங்கை வாங்கவும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் முதலீடுகள் லாபகரமாகட்டும், நீங்களும் உங்கள் புத்தி கூர்மையால் சிறந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள்..அவைவருக்கும் வாழ்த்துக்கள்இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகள் எல்லாம் உதாரணம் மட்டுமே. எந்த வகையிலும் பங்கு பரிந்துரை கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.