இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்கணும்”
இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்கணும்”
இந்தியா மற்ற பெரிய பொருளாதார நாடுகளுடன் போட்டி போட வேண்டுமானால், இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
3 One 4கேபிடல் என்ற பாட்காஸ்டில் தி ரெக்கார்ட் என்ற பெயரில் நாராயணமூர்த்தி பேசியிருக்கிறார். அதில் தேசத்தை வளர்ப்பது,தொழில்நுட்பம்,இன்போசிஸ் உள்ளிட்ட பிற தலைப்புகள் குறித்து நாராயணமூர்த்தி பேசினார். அவருடன் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பாய் என்பவரும் கலந்துரையாடினார். அப்போது பேசிய நாராயணமூர்த்தி,உலகிலேயே பணி சார்ந்த செயல்திறன் குறைப்பு என்பது இந்தியாவில்தான் குறைவு என்று வருத்தும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அளித்த உழைப்பை இனி இந்தியாவும் செய்யவேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் அரசாங்கத்தில் உள்ள ஊழல்கள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.ஊழல்கள் குறைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
77 வயதாகும் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியும்,ஜப்பானும் இதைத்தான் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் எதிர்காலத்தை இளைஞர்கள்தான் தங்கள் தோளில் சுமக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போதுள்ள கலாசாரம் மாறவேண்டும் என்றும் கடின உழைப்பும்,அர்ப்பணிப்பும் இளைஞர்களிடம் தேவை என மாறவேண்டும் என்று நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
பெருந்தொற்றுக்கு பிந்தயை பொருளாதாரம் மீள வேண்டுமானால் இந்தியர்கள் வாரத்துக்கு 60 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி கடந்த 2020ஆம் ஆண்டே தெரிவித்திருந்தார். தற்போது கூடுதலாக 10 மணி நேரத்தை அவர் உயர்த்தியுள்ளார்.