சோனியின் புது கணக்கு..
சோனியும்- ஜீ நிறுவனமும், தங்கள் கூட்டணி முயற்சியை தோல்வியில் முடித்தன. இந்நிலையில் தனது புதிய பார்ட்னரை சோனி தேடி வருகிறது. இந்தியாவில் வேகமாகவளரும் நிறுவனங்களுடன் இணைய இருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் தலைமை நிதி அலுவலரான ஹிரோகி டோடோகி, இந்தியாவில் பொழுதுபோக்குத்துறையில் வேகமாக முதலீடுகள் ஈர்க்கப்படுவதாக கூறினார். தற்போது வலுவான எந்த திட்டமும் இல்லை என்று கூறிய அந்நிறுவன அதிகாரி, முதலீடுகளை ஈர்ப்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்றார். ஜீயும் சோனியும் இணைந்த கூட்டு நிறுவனத்தில் ஜப்பான் நிறுவனமான சோனி 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது., சோனிக்கும்-ஜீ நிறுவனத்துக்கும் இடையில் உள்ள ஒப்பந்தப்படி பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பாக இரு நிறுவனங்களும், தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் கூட முறையிட்டன. ஒரு கட்டத்தில் ஜீ நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமாக ஜீ-சோனி கூட்டு நிறுவன ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.
ஜப்பானைச் சேர்ந்த சோனி நிறுவனம், இந்தியாவில் 26 சேனல்களை நடத்தி வருகிறது. இந்தி மற்றும் மற்ற மொழிகளில் ஓடும் தொலைக்காட்சிகள் 70 கோடி பார்வையாளர்களை கொண்டுள்ளது. சோனி லிவ் என்ற ஓடிடி தளமும் விளையாட்டு மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றன. ஓடிடி தளங்களில் மட்டும் 3கோடியே 30 லட்சம் பேர் பல்வேறு அம்சங்கள் ஒளிபரப்பப் பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் வருவாய் 2023ஆம் நிதியாண்டில் 6684 கோடி ரூபாயாக உள்ளது.