ICICI-யில் சேமிப்பு கணக்கு உள்ளதா? ATM மற்றும் இதர கட்டணங்கள் உயர்வு!
நாட்டின் முதன்மையான தனியார் வங்கிகளில் ஒன்று ICICI. உள்நாட்டு சேமிப்புக் கணக்கு (domestic savings account) வைத்திருப்பவர்களுக்கு பணப் பரிவர்த்தனைகள் (cash transactions), ATM பயன்படுத்த கட்டணம் (interchange fee) மற்றும் காசோலை கட்டணங்கள் ஆகியவற்றை ICICI திருத்தியுள்ளது. இவை ஆகஸ்ட் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. இவை என்னென்னவென்று கீழே பார்ப்போம்
- வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 6 மெட்ரோ (metro) இடங்களில் முதல் 3 பரிவர்த்தனைகளை (நிதி மற்றும் நிதி அல்லாதவை உட்பட) இலவசமாக பெறலாம். மற்ற இடங்களில் (non-metro) முதல் ஐந்து பரிவர்த்தனைகள் இலவசம். அதற்கு மேல், ஒரு நிதிப் பரிவர்த்தனைக்கு (financial transaction) ₹20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு (non-financial transaction) ₹8.50 வசூலிக்கப்படும்.
- மாதத்திற்கு மொத்தம் 4 இலவச பணப் பரிவர்த்தனைகளை (cash transactions) உள்ளது. இலவச வரம்புகளுக்கு மேல் ஒரு பரிவர்த்தனைக்கு ₹150 கட்டணம் வசூலிக்கப்படும்.
- ஆகஸ்ட் 1 முதல், ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கான கணக்கு இருக்கும் கிளையில் (home branch) பண வரம்பு (cash limit) ஒரு கணக்கிற்கு ஒரு மாதத்திற்கு ₹1 லட்சம் வரையில் இலவசம். ₹1 லட்சத்திற்கு மேல், ₹1,000-க்கு ₹5, குறைந்தபட்சம் ₹150 வசூலிக்கப்படும்.
- கணக்கு அல்லாத கிளையில் (non-home branch) ஒரு நாளைக்கு ₹25,000 வரை பண பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை. ₹5,000-க்கு மேல்,₹1,000-க்கு ₹5, குறைந்தபட்சம் ₹150 வசூலிக்கப்படும்.
- ஒரு வருடத்தில் இலவசமாக 10 காசோலைகள் வழங்கப்படும். அதன் பிறகு கொடுக்கப்படும் 10 காசோலைகளுக்கு ₹20 பெறப்படும்.
- மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைகள் (third-party transactions)₹25,000 வரை பெறப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு (₹25,000 வரம்பு வரை)₹150 வசூலிக்கப்படும். ₹25,000 மேல், பண பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது.ஒரு மாதத்தில் முதல் 4 பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதுமில்லை; அதன்பிறகு 1,000-க்கு ₹ 5 அல்லது அதன் ஒரு பகுதி, அதே மாதத்தில் குறைந்தபட்சம் ரூ 150 வசூலிக்கப்படும்.
இதர விவரங்களுக்கு ICICI-யின் இணையதளத்தை https://www.icicibank.com அணுகவும்.