வருமான வரி செலுத்துபவரா நீங்கள் ! நல்ல செய்தி உங்களுக்கு !
வருமான வரி தாக்கலின் போது எந்த பிழையும் ஏற்படாதவாறு நாம் கவனமாக இருப்போம். வங்கி எண்ணை தவறாக குறிப்பது, இதர வருமானங்களிருந்து இருந்து வரும் வட்டியைக் குறிப்பிட மறப்பது மற்றும் தவறான தள்ளுபடி மதிப்புகளைக் குறிப்பிடுவது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.
ஆனால் ஒருவேளை அப்படி நடந்தால்?
கவலைப்பட வேண்டாம், இப்போது அப்படியான தவறுகளை நிவர்த்தி செய்யலாம். வருமான வரி சட்டம் அதை அனுமதிக்கிறது. ஒருவேளை நீங்கள் வருமான வரி தாக்கல் செய்த பின்பு, அதில் தவறு இருப்பதாகக் கண்டுபிடித்தால் அந்தத் தவறான தகவலை சரி செய்ய பிரிவு 139 கீழ் 5 வருமான வரி சட்டம் 1961 அனுமதிக்கின்றது.
ஒருவர் வருமான வரி தாக்கல் செய்த பின்பு அதில் ஏதேனும் தகவல் விட்டுப் போயிருந்தாலோ அல்லது தவறான தகவல் இடம்பெற்றிருந்தாலோ புதிதாக வருமான வரி தாக்கலை அவர்கள் செய்துகொள்ளலாம். புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மூன்று மாதங்களுக்கு முன்போ அல்லது குறிப்பிட்ட நிதி ஆண்டிற்கு முன்போ தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 139 (5) குறிப்பிடுகிறது. மறு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கோப்புகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் தாக்கல் செய்து கொள்ளலாம். ஆனால் இதனையே சாதகமாக்கிக்கொண்டு புகுந்து விளையாடக் கூடாது .
வருமானவரி மறு தாக்கலின்போது அதற்கென உள்ள பத்தியில் பிரிவு 139 (5) கீழ் திருத்தப்பட்டது என்று குறிப்பிட வேண்டும். வருமான தாக்கலின் போது உங்களின் ஆதார், ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்டவை 6 வகையான தகவல்களை கவனமாக சரிபார்க்க வேண்டும்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு தனது வரவு செலவு பட்ஜெட்டில் 2019-2021 ஆண்டுக்கான வருமான வரி தாக்கலை மார்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் கொரானா நோய் தாக்கத்தினால் 2020-2021 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலவரையறை டிசம்பர் 31 2021 வரை நீட்டித்துள்ளது.