Indus ind – NSIC ஒப்பந்தம்
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க, என்எஸ்ஐசி உடன் இண்டஸ்இண்ட் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இண்டஸ்இண்ட் வங்கி, இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சிறு தொழில்கள் கழகத்துடன் (NSIC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த கூட்டுறவின் மூலம், நாடு முழுவதும் உள்ள 6.7 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை விரைவுபடுத்தவும், விரிவான நிதி உதவிகளை வழங்கவும் வங்கி செயல்படும்.
இண்டஸ்இண்ட் வங்கி, NSIC உடன் இணைந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு, செயல்பாட்டு மூலதனம் (working capital), காலக் கடன்கள் (term loans), மற்றும் கட்டமைக்கப்பட்ட கடன் வசதிகள் (structured credit facilities) உட்பட பல்வேறு வங்கி சேவைகளை வழங்கும்.
இண்டஸ்இண்ட் வங்கி தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்காக, நுண்கடன், தனிநபர் கடன்கள், தனிநபர் மற்றும் வர்த்தக வாகனக் கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் SME கடன்கள் போன்ற பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
