NaBFIDன் தலைவராக கேவி காமத் நியமனம் !
NaBFID எனப்படும் நிதியளிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் தலைவராக முன்னாள் வங்கியியலாளரான கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கி நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமானதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, NaBFID வங்கிக்கான ஒப்புதலை பாராளுமன்றம் 2021 மார்ச் மாதம் அளித்தது இது இந்தியாவில் நீண்டகால ஆதாரமற்ற உள்கட்டமைப்பு நிதி உதவி, உள்கட்டமைப்பு நிதி உதவிக்கு தேவையான பத்திரங்கள் மற்றும் சந்தை மேம்பாடு பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஆத்ம நிர்பார் பாரதத்தை உருவாக்குவதற்காக புதிய அணுகுமுறை !
புதிதாக அமைக்கப்பட்டுள்ள DFI கான நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் தலைவர் பதவிக்கு முன்னாள் செயலாளர் கே வி காமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. 2024-25க்குள் 111 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை எதிர்பார்க்கும் தேசிய உள்கட்டமைப்பு பைப் லைனின் (NIP) கீழ் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த வங்கி உதவும். CAG, CVC மற்றும் CBI ஆகியவற்றின் வரம்புக்கு வெளியே இருக்கும். திரு.காமத், ஐஐஎம் அகமதாபாத் முன்னாள் மாணவர் ஆவார். ஐசிஐசிஐ யில் தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், 2009ஆம் ஆண்டு நிர்வாக இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். DFI விரைவான, முடிவு எடுக்க, செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிதியை 3 லட்சம் கோடிவரை திரட்ட DFI இலக்கு நிர்ணயிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.