வருமான வரித்துறை போர்ட்டலில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கும் வழிமுறைகள் !
வருமான வரித்துறை போர்ட்டலில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கும் வழிமுறைகள் !
இன்னும் நீங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வில்லையா? வருமான வரித் துறை, இதனை எளிதாக இணைப்பதற்கு வழிகாட்டுகிறது. பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் கார்டுடன் அதனை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வருமான வரித்துறை கூறியிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று இத்திட்டத்தை தாமதப்படுத்தியது, இதனால் இத்திட்டம் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
முழு வேகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் வருமான வரித் துறை இதற்குத் தீர்வு கண்டிருக்கிறது, அதன் அடிப்படையில் ஆன்லைன் மூலம் பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான வழி என்ன என்பதை இங்கு காணலாம்.
முதலில் செயல்பாட்டில் இருக்கும் பான்கார்டு மற்றும் மொபைல் எண்ணை வருமான வரித்துறையின் இ- ஃபைலிங்கில் உள்ளீடு செய்ய வேண்டும் , உடனடியாக தொடர்புடைய உங்கள் மொபைல் போனுக்கு ஒரு ஓடிபி கிடைக்கும். அதனை சரிபார்ப்பு இடத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
உள்நுழைவுக்குப்பின் டேஷ்போர்ட்டில் இணைப்பு ஆதார் விண்டோவை கிளிக் செய்யவும், ஏற்கனவே இணைப்பில் இருப்பவர்களும் மாற்றங்களுக்காக இந்த சேவையை அணுகலாம், இணைப்புக்கான பக்கத்தில் உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும், மேலும் பான் கார்டில் பாலினம் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும் எனவே அதனைத் திருத்த முடியாது
பின்னர் செயல்பாட்டில் இருக்கும் ஆதார் விவரங்களின்படி உங்கள் ஆதார் எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்யவும், இருப்பினும், இணைப்பு அதன் நடைமுறையைத் தொடர “எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன்” என்ற விருப்பத்தை தேர்வு செய்வது கட்டாயமாகும்
இ ஃபைலிங் போர்ட்டல்படி பான் எண்ணுடன் ஆதார் இப்போது இணைக்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கும்.
அவ்வளவுதான் ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைச்சாச்சு.