வங்கித்துறையை வளர்த்துவிட்டதில் ரிசர்வ் வங்கிக்கு பங்கு…
நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கித்துறை நிறுவனங்களுக்கு வசதியாக மாற்று முதலீட்டுத்து திட்டத்தில் , சில முதலீட்டு நுட்ப விதிகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியதால் அந்த துறை பங்குகளில் சில 4 விழுக்காடு வரை கூட உயர்ந்தன. பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ ,பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை இந்த உயர்வில் முக்கியமானவையாக கூறப்படுகிறது. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மாற்று முதலீட்டு நிதி தொடர்பான விதிகள் கட்டாயம் என்று கடந்த டிசம்பரில் அறிக்கை வெளியானது. அதில் சில தளர்வுகள் தற்போது அளிக்கப்பட்டுள்ளன. இதனால் மாற்று முதலீட்டுத்தொகை எதுவும் கணக்கில் கொள்ளாமல் வணிகம் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுவும் பங்குச்சந்தைகள் உயர முக்கிய காரணியாக இருக்கிறது. மாற்று முதலீட்டு நிதியின் அளவு கருத்தில் கொள்ளப்படாது என்ற விதியால் இவ்வளவு நாள் சிக்கலில் இருந்த வங்கித்துறை பங்குகள் இன்னும் அதிக கடனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இயலும் என்பதால் அந்த துறை பங்குகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.