அச்சச்சோ! வீட்டுக் கடனில் இணைக் கடன்தாரரா (co-borrower)? இன்றே படியுங்கள்!
முதன்மைக் கடன் வாங்குபவர் வீட்டுக் கடனுக்காகச் செல்லும்போது ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். நீங்கள் கடன் வாங்கியவரிடமிருந்து காப்பீட்டை எடுக்கலாம் அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள காப்பீட்டு நகலை சமர்ப்பிக்கலாம்.. ஒருவேளை இணைக் கடன்தாரர்கள் (co-borrowers) இருந்தால் அவர்களும் ஆயுள் காப்பீடு பெற்றிருக்க வேண்டும். சமீபத்தில் நிகழ்ந்த கோவிட் பெருந்தொற்று மரணங்கள் அனைவரையும் ஒரு ஆயுள் காப்பீடு செய்து கொள்வதற்கு உந்துகிறது.
எடுத்துக்காட்டாக, பணியிலிருக்கும் ஒரு கணவனும், மனைவியும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டுக் கடன் பெற்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். முதன்மைக் கடன்தாரர் மனைவி, கடன் வழங்குபவர் அப்போது முதன்மை கடன்தாரரை ஆயுள் காப்பீடு செய்து கொள்ள வலியுறுத்தி அவரும் காப்பீடு செய்து கொண்டார். அப்போது இணைக் கடன்தாரரான கணவரை காப்பீடு செய்து கொள்ள வலியுறுத்தவில்லை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டார். கணவர் தவணைத் தொகையை (EMI) செலுத்தி வந்தார். பெருந்தொற்றுத் தாக்குதலால் கணவர் இறக்க நேரிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது முதன்மைக் கடந்தாரரான மனைவி உயிரோடிருக்கிறார். அவருக்கு ஆயுள் காப்பீடு இருக்கிறது. ஆனால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வந்த இணைக் கடன்தாரர் இப்போது இல்லை. இதுபோன்ற சூழல் இயல்பானது, குறிப்பாக கணவர் தொழில் முனைவோராகவும், மனைவி பணியாற்றுபவராகவும் இருப்பது.
வங்கிகள், பணியில் இருப்பவர்களுக்கும் பெண்களுக்கும் மிகச்சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. State Bank of India-வை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவர்களுடைய இணையத்தளத்தில் கிடைக்கும் விவரங்களின்படி, பணியில் இல்லாதவர்களுக்கு வழங்கும் கடன்கள் அதிக அடிப்படைப் புள்ளிகளைக் கோருகின்றன. அதாவது பணியில் இருந்து சம்பளம் வாங்குபவர்களை விட 15 புள்ளிகள் அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல பெண்களுக்கு கடன் வழங்க 5 புள்ளிகள் குறைவாகவே தேவைப்படும்.
ஒரு அடிப்படைப் புள்ளி என்பது சதவிகிதத்தின்படி நூறில் ஒரு புள்ளி. ஆகவே, இணைக் கடன்தாரர்கள் ஒரு ஆயுள் காப்பீடு செய்து கொள்வது எப்போதும் சிறந்த முடிவு. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஆயுள் காப்பீடு செய்து கொள்ளும் தொகையானது வீட்டுக் கடன் போன்றவற்றை பூர்த்தி செய்து வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுமாறு தேர்வு செய்வது முக்கியமானது. ஒருவேளை குடும்பத்தின் தலைவர் இறக்க நேரிட்டால், இத்தகைய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மிகச் சிறந்த பலனளிக்கும்.