₹452 கோடி லாபம்..
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் Q1 முடிவுகள்: நிகர லாபம் ₹452.45 கோடியாக குறைந்தது.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் (GCPL), ஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த முதல் காலாண்டில், அதன் நிகர லாபம் சற்று குறைந்து ₹452.45 கோடியாக பதிவானதாக அறிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ₹450.69 கோடியாக இருந்தது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் இந்தோனேசிய வணிகத்தில் ஏற்பட்ட சவால்களே இந்த லாப குறைவுக்கு முக்கிய காரணங்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ₹3,661.86 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹3,331.58 கோடியாக இருந்தது.
ஆனால், அதே நேரத்தில் மொத்த செலவுகள் ₹2,744.36 கோடியிலிருந்து ₹3,113.14 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், மூலப்பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்களுக்கான செலவு மட்டும் ₹1,480.31 கோடியாக இருந்தது.
GCPL-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, சுதிர் சிட்டாபதி கூறுகையில், “இந்த முதல் காலாண்டு சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, சோப்புகளை தவிர்த்து, பிற தயாரிப்புகளின் விற்பனையில் நல்ல வளர்ச்சி இருந்தது.
பெரும்பாலான துறைகளில் வலுவான செயல்திறன் காரணமாக, ஒட்டுமொத்த அளவில் நல்ல முன்னேற்றம் கண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
