ஒரே ஆண்டில் வருமானத்தை இரட்டிப்பாக்கிய ஆப்பிள் இந்தியா !
ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் $ 3.3 பில்லியன்களை இந்தியாவில் ஈட்டி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆப்பிள் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்,” ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் வியட்நாமில் தனது விற்பனையை இரட்டிப்பாகி உள்ளது, இந்தியாவில் ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பார்க்கமுடியும். ஐபோன் 13 போன்ற மாடல்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகமாகும் போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்கு முன்பாக ஒரு புதிய ஐபோனை பெறுவதற்கு மூன்றில் இருந்து நான்கு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது
இந்த நிதியாண்டில் ஆப்பிள் இந்தியாவின் வருவாய், ஜப்பான் மற்றும் சீனாவை விட 13 % அதிகமாக இருந்தது. இந்த நிதியாண்டில் மட்டும் ஆசிய பசிபிக் நாடுகளின் விற்பனை 23.3 டாலர் பில்லியனை எட்டியது. சீனாவின் மொத்த விற்பனையில் 18.67 விழுக்காட்டினைப் பெற்றுள்ளது. இது அமெரிக்க, ஐரோப்பிய சந்தைக்கு பிறகு மூன்றாவது பெரிய சந்தை ஆகும். ஆப்பிள் தயாரிப்புக்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும், இப்போது ஆப்பிளின் பார்வை மாறிவிட்டது, இந்தியாவில் ஒரு மாற்று தளத்தினை ஆப்பிள் அமைத்துக் கொண்டது.
அமெரிக்க நிறுவனத்தின் நெருக்கமான விற்பனையாளர்களான பாக்ஸ் கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை இந்தியாவில் கணிசமாக முதலீடு செய்து உற்பத்தியை பெருக்குகின்றன, அது இன்னொரு பக்கம் இறக்குமதி செய்வதை விட சுலபமாகவும் அதே சமயம் விலை குறைவாக இருக்கிறது, இந்தியாவில் உற்பத்தியாகும் 70 % போன்களை விற்பனை செய்துவிடுகிறது ஆப்பிள் நிறுவனம்.