விதிமீறல்களுக்காக இ-காம் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் !
கடந்த ஓராண்டில் மட்டும் தங்கள் தயாரிப்புகளில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் சரிவர இல்லாததால் 217 பொருட்களுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக மின்னணு சாதனங்கள். ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விதிமீறலுக்குள்ளானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நோட்டீசில் இருக்கும் 217 அறிவிப்புகளில், 202 பொருட்களின் மீது தயாரிக்கப்பட்ட இடத்தின் பெயர், காலாவதியான தேதி, மற்றும் இறக்குமதியாளர்கள் முகவரி இல்லாதது, எம்.ஆர்.பி யை விட அதிக விலைக்கு விற்றது. தரமற்ற பொருட்கள் மற்றும் தவறான நிகர எடை உள்ளிட்டவற்றிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இணையவழி வர்த்தக நிறுவனங்களின் பெயர் மற்றும் விவரங்களை நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிடவில்லை.
விதிமீறல் நிறுவனங்களின் பெயர்களை ஏன் அறிவிக்க மறுக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நுகர்வோர் விவகார செயலாளர் லீலா நந்தன் ‘நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர்களை எச்சரிக்கை செய்ய முயற்சிக்கிறோம், நுகர்வோர் குறை தீர்க்கும் வகையில் சட்டபூர்வமாக அனைத்தையும் தாங்கள் செய்யத் தயார் என்றும், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிறுவனங்கள் அறிந்திருக்கவேண்டும். நுகர்வோர் தங்கள் உரிமையை அறிந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.