வெளிநாட்டிலிருந்து தங்கம் அல்லது வெள்ளி வாங்கப்போறீங்களா? அப்ப இந்தாங்க ஒரு குட் நியூஸ் பார்சல்!
தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் நம்மில் பலருக்கும் விருப்பம் உண்டு. அடிப்படை இறக்குமதி விலை (base import price) என்பது ஒருவர் நாட்டிற்குள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியைக் கணக்கிட உதவும். இந்தியாவில் தங்கத்திற்கு 7.5% இறக்குமதி வரி (import duty) மற்றும் 3% GST விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு சந்தையில் விலைகள் சரிந்ததால், பாமாயில், சோயா ஆயில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை இந்திய அரசு குறைத்தது.
ஜூலை 1, 2021 முதல், இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிக்கான கட்டண மதிப்பு (tariff value) இப்போது 10 கிராமுக்கு $ 566 ஆகவும், கிலோவுக்கு $836 ஆகவும் உள்ளது. இதற்குமுன் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிக்கான கட்டண மதிப்பு, முறையே 10 கிராமுக்கு $ 601 ஆகவும், ஒரு கிலோவுக்கு $ 893 ஆகவும் இருந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மீது 10 கிராமுக்கு $ 566 கட்டண மதிப்பு டோலா பார்கள் (tola bars) தவிர மற்ற கோல்ட் பார்களுக்கு பொருந்தும். அந்த பார்களில் வரிசை எண் (serial number) மற்றும் மெட்ரிக் அலகுகளில் (metric units) எடையின் குறிப்பு இருக்கவேண்டும். தங்க நாணயங்களுக்கும் (gold coins) இது பொருந்தும்.
சில்வர், எந்த வடிவத்தில் இருந்தாலும் (வெள்ளி நாணயங்கள் தவிர) இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளிக்கு ஒரு கிலோவிற்கு $ 836 என்ற கட்டண மதிப்பு பொருந்தும்.