நம்பிக்கையோடு போராடி வெற்றி கண்ட இளைஞர்களின் கதை !
கடந்த சில ஆண்டுகளாக கொரானாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மந்தநிலை காரணமாக வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர் பற்றாக்குறை, சீர்குலைந்த விநியோக சங்கிலி, சந்தை அணுகல் இல்லாமை போன்ற காரணிகள் நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் பகுதி நேர வணிக உரிமையாளர்களின் வணிகத்தை முடங்கியுள்ளது.
ஆனாலும் எந்த ஒரு எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடனும், உறுதியுடன், எதிர்கொண்டு மாறிவரும் காலத்திற்கு ஏற்பவும், நுகர்வோர் விருப்பத்திற்கும் ஏற்பவும், மறு உத்திகளை வகுத்து புதுமையை கையாண்டவர்கள் உள்நாட்டில் மட்டுமன்றி தங்கள் தொழிலை எல்லைகள் கடந்து வெளிநாட்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்
அப்படி வெற்றி பெற்ற சில மனிதர்களை கதைகளை பார்ப்போம், அதில் முதலாவதாக அதிதி மற்றும் அஸ்வினி சகோதரிகளின் கதையை கேளுங்கள். 2013ஆம் ஆண்டில் தனது குடும்பம் பணச் சிக்கலில் மாட்டிக் கொண்டு வெளியே தலை காட்ட முடியாத சூழல். சிறிய அறையில் தங்களது குடும்ப தொழிலான நகை வணிகத்தை தொடங்கினார்கள். இரு சகோதரிகளின் அயராத முயற்சியினால் இன்றைக்கு சர்வதேச அளவில் தங்க நகை விற்பனை செய்து வருகிறார்கள்.
லண்டனில் தனது முதுகலைப் படிப்பை முடித்த அதிதி, கல்வி கடன்களால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். அவரது சகோதரி அஸ்வினியும் தாயாகி இருந்த நேரம் அது. அந்த நிதிச் சிக்கல்தான் அஸ்வினி மற்றும் அதிதி ஆகியோரை தங்களது குடும்ப தொழிலான நகை வணிகத்தை நோக்கித் திருப்பியது. ஆதர்ஷ்டிரா ஜுவல்லரி உதயமானது.
“நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் எங்களின் கீழ் பணி செய்ய பலர் மறுத்துவிட்டனர். ஆனால் இன்றைக்கு நிறுவனத்தின் பெரும்பான்மை ஆண்களுக்குத் தலைமை தாங்குவது இரண்டு பெண்கள்” என்று பெருமையோடு கூறுகிறார் அதிதி.
இன்றைக்கு ஆதர்ஷ்டிரா ஜுவல்லரியில் 70 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அதில் 70 சதவீதம் பெண்கள். உள்ளூர் பெண்களை ஆதரிப்பதில் அவர்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறார்கள். அதிதி மார்க்கெட்டிங் துறையில் விற்பனர். அஸ்வினி நிதித்துறையில் விற்பனர். இவர்களிடமிருந்து வித்தியாசமான கதைதான் மிலன் படேலுடையது.
தனது டிஜிட்டல் நிறுவனமான “ஜல்சா ஆன்லைன்” நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டு மிலன் தொடங்கினார், ஆரம்பத்தில் அவரது வணிகத்தை ஆன்லைனில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவரது ஆசை, தடைகளை சமாளிக்க அவருக்கு உதவியது. “வாங்குபவர்களின் விருப்பங்கள், விற்பனை விருப்பங்களை புரிந்து கொள்வதற்கும், விழிப்புணர்வை வளர்ப்பதற்கும் ஆன்லைன் உதவியாக இருந்தது” என்கிறார் மிலன்.
‘எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது? எப்படி செய்வது? கூட்டத்தில் தனித்து நிற்பதற்காக என்ன செய்வது? என்பதில் கவனம் செலுத்தினேன், பசி, தூக்கம் மறந்து ஆன்லைன் சில்லறை விற்பனை ஏற்றுமதி அதன் நுணுக்கங்களை கற்றுத் தேர்ச்சி பெற்றேன். எனது முயற்சி வீண் போகவில்லை” என்கிறார் மிலன். சிறிய அளவில் தொடங்கப்பட்ட வியாபாரம், இன்று மகாராஷ்டிராவில் பெரிய நிறுவனமாக வளர்ந்து ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது.
இதேபோன்றதொரு கதைதான் ரிக்கி கார்க் உடையது, டெல்லியில் வசிக்கும் ரிக்கி தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் தனது குடும்பத் தொழிலான நகை வணிகத்திற்கு திரும்பினார். தனது வியாபாரத்தை ஆன்லைனில் கொண்டு வந்த இவர் இன்றைக்கு உலகளாவிய வணிகத்தை பெற்றிருக்கிறார் உயர்தரமான கேட்டலாக், பொருட்கள் திரும்ப பெறுவதை குறைத்தல், வாடிக்கையாளர்களுக்கு கனிவான சேவை வழங்குதல் ஆகியன இவரை எப்பொழுதும் இல்லாத உயரத்துக்கு உயர்த்தி வைத்துள்ளது
இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனது = வியாபாரத்தை விஸ்தரித்துள்ளார் ரிக்கி. இன்னும் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற இடங்களில் தனது வியாபாரத்தை விஸ்தரிக்க உள்ளார்
நம்பிக்கையோடு உலகை அணுகும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது என்பதுதான் உண்மை.