லாபம் ஈட்டிய ITC
ஆகஸ்ட் 1, 2025 அன்று, சுமார் 96 நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான வருவாய் அறிக்கைகளை வெளியிட்டன. இதில் ஐ.டி.சி, அதானி பவர், டாடா பவர், டெல்லிவரி, கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் முடிவுகள் அடங்கும்.
ஐ.டி.சி தனது இரண்டு துணை நிறுவனங்களான ஸ்ரேஸ்தா நேச்சுரல் பயோப்ராடக்ட்ஸ் (SNBPL) விக்மோ லிமிடெட் ஆகியவற்றை இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.டி.சி-யின் Q1 FY26 நிகர லாபம் ₹4,912 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் அதே காலாண்டின் ₹4,917 கோடி லாபத்துடன் கிட்டத்தட்ட சமம்.
எனினும், நிறுவனத்தின் வருவாய் 20% உயர்ந்து ₹21,059 கோடியை எட்டியது. சிகரெட் விற்பனை 3-5% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிக புகையிலை விலையால் EBITA வரம்புகள் குறையலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். FMCG வருவாய் 5% வளரலாம். வேளாண் வணிகம் 10% வலுவான வளர்ச்சி பெறும்.
அதானி பவர் Q1 FY26-ல் நிகர லாபம் 13.5% குறைந்து ₹3,385 கோடியானது. வருவாய் 6% சரிந்து ₹14,109 கோடியானது. இச்சரிவு இருந்தபோதும், நிறுவனம் 1:5 என்ற விகிதத்தில் பங்குப் பிரிப்பை அறிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்களின் முக்கிய முடிவுகள்:
• டெல்லிவரி: நிகர லாபம் 67% அதிகரித்து ₹91 கோடியானது.
• டாடா பவர்: நிகர லாபம் 9% அதிகரித்து ₹1,060 கோடியானது.
• கோத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ்: நிகர லாபம் 15% அதிகரித்து ₹600 கோடியானது, ஆனால் வருவாய் 41% சரிந்தது.
• யு.பி.எல்: நிகர நஷ்டம் ₹88 கோடியாகக் குறைந்தது.
• கிராஃபைட் இந்தியா: நிகர லாபம் 43% குறைந்து ₹134 கோடியானது.
• ஹெஸ்டர் பயோ சயின்சஸ்: நிகர லாபம் 159% அதிகரித்து ₹16.44 கோடியானது.
இந்த காலாண்டு முடிவுகள் பல்வேறு துறைகளில் கலவையான போக்கை காட்டுகின்றன.
சில நிறுவனங்கள் லாபத்தில் சரிவை சந்தித்தாலும், சில குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
SNBPL ’24 மந்திரா ஆர்கானிக்’ பிராண்டின் கீழ் ஆர்கானிக் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
