ITC hotels அதிரடி
ஐ.டி.சி ஹோட்டல்ஸ் தலைவர் சஞ்சீவ் பூரி பின் வருமாறு தெரிவித்தார் — 2030 ஆண்டிற்குள் நிறுவனம் 220-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை நடத்தும். இது, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட 200 ஹோட்டல்கள் என்ற இலக்கை தாண்டும் சாதனையாகும். தற்போதைய சூழலில், அறைகள் தேவை, வழங்கலை விட வேகமாக அதிகரித்து வருவதால், பூர்த்தி விகிதம் (Occupancy) மற்றும் வருமானம் இரண்டும் உயரும்.
அந்நிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை விரைவில் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த நிலையை மிஞ்சும். பொருளாதார வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மேம்பாடு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு தூண்டுதலாக உள்ளன.
சஞ்சீவ் பூரி கூறுகையில், கடந்த ஆண்டு நிறுவனம் 30 உரிமம் மற்றும் மேலாண்மை ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. 2030க்குள் 220 ஹோட்டல்கள், மொத்தம் 20,000 அறைகள் இருக்கும். மேலாண்மை, இதையும் தாண்டும் வழிகளை ஆராய்கிறது. ‘அசெட் ரைட்’ என்ற உத்தி வளர்ச்சியை வேகமாக்கும். இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் விரிவாக்கம் நடைபெறுகிறது. தற்போது, ஆறு பிராண்டுகளில் 90 இடங்களில் 143 ஹோட்டல்கள் இயங்குகின்றன.
இந்திய விருந்தினர் துறை, சமூக விருப்பங்கள் உயர்வு, இந்தியா முதலீட்டு தலமாக உயர்ந்த நிலை, இணையதள முன்னேற்றம், வலுவான பொருளாதார சூழல் ஆகிய காரணங்களால் வேகமான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. இயற்கை, சாகசம், கலாச்சாரம், ஆன்மிகம், மதம், மருத்துவம் போன்ற பல துறைகளில் சுற்றுலா வளர்ச்சி கணிசமாக அதிகரித்துள்ளது.
அரசு 50 புதிய சுற்றுலா தலங்களை உருவாக்கும் திட்டம் வேலை வாய்ப்பை பெரிதும் உயர்த்தும். ஆனால், உலக அரசியல் பிளவு கவனிக்க வேண்டியதாக சஞ்சீவ் பூரி குறிப்பிட்டார். 2024-இல் இந்தியாவுக்கு வந்த அந்நிய சுற்றுலா வருமானம் 1 கோடியை எட்டாத போதிலும், 2019-இல் இருந்த 1.1 கோடியை மீறும் வாய்ப்பு அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.
