செப்டம்பரில் குறைந்த சேவைத்துறை வளர்ச்சி:
இந்தியாவின் சேவைகள் துறை வளர்ச்சி விகிதம் செப்டம்பரில் குறைந்துள்ளது. வெளியிடப்பட்ட S&P குளோபல் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 62.9 ஆக இருந்த HSBC இந்தியா சேவைகள் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (PMI) , செப்டம்பரில் 60.9 ஆகக் குறைந்துள்ளது.
“இந்தியாவின் சேவைகள் துறையில், வணிக நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் இருந்த உயர் மட்டத்திலிருந்து செப்டம்பரில் குறைந்துள்ளன. ஆனால் சேவைகளில் வளர்ச்சி வேகத்தில் பெரிய இழப்பு இருப்பதாகக் கூற முடியாது.
அதற்கு பதிலாக, எதிர்கால செயல்பாடுகள் பற்றிய குறியீடு, மார்ச் மாதத்திலிருந்து அதன் மிக உயர்ந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. இது வணிக வாய்ப்புகள் குறித்த சேவை நிறுவனங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதைக் குறிக்கிறது” என்று HSBC இன் தலைமை இந்திய பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறியுள்ளார்.
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி விகிதமும் செப்டம்பரில் சற்று குறைந்துள்ளது. உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (PMI) ஆகஸ்ட் மாதத்தில் 59.3 ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 57.7 ஆகக் குறைந்துள்ளதாக S&P குளோபல் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
