ஸ்பந்தனா ஸ்பூர்த்தி Q1-ல் ₹360 கோடி இழப்பு
ஸ்பந்தனா ஸ்பூர்த்தி Q1-ல் ₹360 கோடி இழப்பு; தொடர்ந்து நான்காவது காலாண்டாக நஷ்டம்
ஸ்பந்தனா ஸ்பூர்த்தி ஃபைனான்சியல் நிறுவனம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ₹360 கோடி ஒருங்கிணைந்த நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இது அந்நிறுவனத்திற்கு தொடர்ந்து நான்காவது காலாண்டில் ஏற்பட்ட இழப்பாகும். சொத்துக்களின் தரம் குறைந்ததும், வணிகம் குறைந்ததும் இதற்கு முக்கிய காரணங்கள்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ₹56 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு காலாண்டிலும் நஷ்டத்தையே சந்தித்து வருகிறது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ₹734 கோடியிலிருந்து 59% சரிந்து ₹304 கோடியாக குறைந்துள்ளது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ₹209 கோடியிலிருந்து ₹422 கோடியாக அதிகரித்துள்ளது.
“ஜூன் 30, 2025-ல் முடிவடைந்த காலாண்டில் ஏற்பட்ட இழப்புகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களின் கடன் மதிப்பீட்டில் சரிவுதான் முக்கிய காரணம் என்று நிறுவனம் பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூன் காலாண்டில் மட்டும் சுமார் ₹581 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
இது கடன் செலவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்தது.
“இதை சரிசெய்ய, கள அளவில் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் வரும் காலத்தில் நிலைமை மேம்படும்.
இதன் மூலம் எதிர்கால லாபங்களில் இந்த இழப்புகளை முழுமையாக ஈடுசெய்ய முடியும்,” என்று நிறுவனத்தின் தலைவர் அபாந்தி மித்ரா, இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் குமார் டமானி ஆகியோர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஜூன் காலாண்டில் வரிக்கு முந்தைய மொத்த இழப்பு ₹481 கோடியாக இருந்தது. திருத்தப்பட்ட வணிகத் திட்டங்கள், வரவு செலவுத் திட்டங்களின் அடிப்படையில், எதிர்கால வரிக்கு உட்பட்ட வருமானத்தின் மூலம் ₹544 கோடி வரி சொத்துக்களை திரும்பப் பெற முடியும் என்று ஸ்பந்தனா நிறுவனம் தெரிவித்துள்ளது.
