டீ விற்பனையில் இருந்து வெளியேறும் டாடா !
டாடா குழுமம் தனது டீ விற்பனை நிலையங்களில் இருந்து வெளியேறுகிறது. இனி அதன் நுகர்வோர் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் பெங்களூரில் 4 டீ விற்பனை நிலையங்களை சங்கிலித் தொடராக திறந்தது. அதற்கு “டாடா ச்சா” என்றும் பெயரிட்டது.
யார் கண் பட்டதோ என்னவோ அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே அதற்கு மூடு விழா நடத்தப்பட்டது, ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல 2017ஆம் ஆண்டு அதே பெயரில் மீண்டும் தனது டீ விற்பனை நிலையங்களைத் திறந்தது. இம்முறை டீயுடன் விரைவு சேவை உணவுகளும் சேர்க்கப்பட்டன. இப்போது டாடா டீக்கு பெங்களூரில் 12 கிளைகள் உள்ளன
இந்நிலையில் டாடா நிறுவனம் டீ விற்பனையில் இருந்து , தனது நுகர்பொருள் சேவைகளுக்கு திரும்பப் போவதாக கூறி உள்ளது, இதனிடையே இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான Qmin – shops க்கு தனது டீ விற்பனை நிலையத்தை கை மாற்ற உள்ளதாக ஒரு செய்திக் குறிப்பில் டாடா நிறுவனம் கூறியிருக்கிறது.