அடுத்தடுத்து அசத்தும் TATA
இந்தியாவில் மின்சார வணிக வாகனங்கள் விற்பனையை மேம்படுத்த, டாடா பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பவர் EV சார்ஜிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம், VE கம்ர்சியல் வெஹிக்கில்ஸ் நிறுவனத்துடன் (VECV) கூட்டு சேர்ந்துள்ளது
மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த விரும்பும் லாரி மற்றும் பேருந்து நிறுவனங்களுக்கு உதவ, பல முனைகளில் VECV உடன் இணைந்து செயல்பட உள்ளது.
இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், டாடா பவர் நிறுவனம், அதன் விரிவான EV சார்ஜிங் மையன்கள் மற்றும் சார்ஜிங் துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தனித்துவம் மிக்க தீர்வுகளை வழங்கும். VECV நிறுவனம், மின்சார லாரிகளில் மின்சார பயன்பாட்டை மேம்படுத்தி, அவற்றை பயன்படுத்துபவர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும்.
”இரு நிறுவனங்களும் சேர்ந்து, ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளின் வாடிக்கையாளர்களுடன் இணைந்து, மின்சார வாகன பயன்பாட்டிற்கு அவர்கள் மாறுவதை ஊக்குவிக்கும். இது இந்திய போக்குவரத்துத் துறையில் தூய்மையான, நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யும்” என டாடா மோட்டர்ஸ் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சார்ஜ் செய்யப்பட்ட மின்சார வாகனங்கள் செல்லும் தூரத்தின் அளவு, சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை, செலவுகள் போன்ற பிரச்சனைகள் மீது இந்த கூட்டணி கவனம் குவிக்கும் என்று கூறியுள்ளது.
மின்சார லாரிகள் மற்றும் பேருந்துகளின் முன்னணி உற்பத்தியாளரான VE கம்ர்சியல் வெஹிக்கில்ஸ் நிறுவனம், வால்வோ குழுமம் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் இடையேயான கூட்டு முயற்சியாகும்.
EZ சார்ஜ் என்ற பிராண்ட் பெயரில், டாடா பவர் அதன் EV சார்ஜிங் மையங்களின் நெட்வொர்க்கை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு சார்ஜர்கள், 5,500+ பொது, அரை-பொது மற்றும் வாகன தொகுப்பு சார்ஜிங் புள்ளிகள் என விரிவுபடுத்தியுள்ளது. 630+ நகரங்கள் மற்றும் நகரங்களில் 1,200+ மின்-பஸ் சார்ஜிங் புள்ளிகள் என விரிவுபடுத்தியுள்ளது.
