22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
தொழில்துறை

இலங்கையில் டாடா டிரக்ஸ்..

டாடா மோட்டார்ஸ் இலங்கையில் புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இலங்கையில் தனது விநியோகஸ்தரான டிமோ (DIMO) உடன் இணைந்து 10 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அறிமுகம், இலங்கையில் டாடா மோட்டார்ஸ் தனது சந்தை இருப்பை விரிவுபடுத்துவதைக் காட்டுகிறது. இது டிமோ நிறுவனத்துடனான 65 ஆண்டுகால நீண்ட கூட்டாண்மையையும் குறிக்கிறது.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்கள், பல்வேறு சரக்கு பயணிகள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இலங்கையின் மாறிவரும் சந்தைத் தேவைக்கு ஏற்ப சிறந்த செயல்திறன், நம்பகத்தன்மை குறைந்த இயக்கச் செலவு ஆகியவற்றை வழங்குகின்றன.


டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குநர் கிரிஷ் வாக் பேசுகையில், “இலங்கை சந்தை குறித்த புரிதலின் அடிப்படையில், நாட்டின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு தளவாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

டிமோவின் 65 ஆண்டுகால கூட்டாண்மையுடன், இந்த வாகனங்கள் இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய அளவுகோல்களை உருவாக்கும் என நம்புகிறோம்” என்றார்.


டிமோ நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பண்டிதகே பேசுகையில், “65 ஆண்டுகளுக்கும் மேலாக, டாடா மோட்டார்ஸ் வாகனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த புதிய வாகனங்கள் சிறந்த தொழில்நுட்பத்துடன் எங்கள் சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்கள் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையால், ஒவ்வொரு வாகனமும் நீடித்த செயல்திறன் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.


புதிய வாகனங்களில் நகர்ப்புற சரக்கு போக்குவரத்துக்கு அல்ட்ரா ரக டிரக்குகள் (T.7, T.9, T.12, T.14, 1918.T) உள்ளன. நீண்ட தூர பயணத்திற்கு பிரிமா 5530.S, சிக்னா 5530.S டிரக்குகள் பயன்படும். பயணிகள் போக்குவரத்திற்கு LPO 1622 மேக்னா பஸ், பணியாளர் போக்குவரத்திற்கு அல்ட்ரா பிரைம் LPO 8.6 மற்றும் LPO 11.6 பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


டிமோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 15 சேவை மையங்கள் மூலம் உதிரிபாகங்கள், சரியான நேரத்தில் பராமரிப்பு சேவை ஆகியவற்றை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *