தீபாவளி: கார் விற்பனை 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு !
தீபாவளி நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளின் போது கார்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக கார் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்து காணப்படுவது அறிந்த விஷயம்தான், ஆனால், பொதுவாகவே தீபாவளியை ஒட்டி கார்களின் விற்பனை அமோகமாக இருக்கும்.
வட இந்தியாவில் கார் வாங்குவது என்பது உணர்வுபூர்வமான விஷயம். கடந்த 30 நாட்களில் வாகனப்பதிவு இரண்டு இலக்கமாகவே இருந்தது. குறிப்பாக பயணிகள் வாகனம் செமிகண்டக்டர் மற்றும் விநியோகம் ஆகியவை குறைந்ததால் தயாரிப்பும் குறைந்தது. இரு சக்கர வாகனங்களிலும் அதேபோல மந்தநிலை நீடித்தது. கார்களின் விற்பனை குறித்து வல்லுனர்கள் கூறுகையில்,” கடந்த வருடம் 4 லட்சத்து 55 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகின, அது இந்த வருடம் 3,05,000 ஆகக் குறைந்துவிட்டது. இது கடந்த வருடத்தை விட 22 சதவீதம் குறைவு.
இரு சக்கர வாகனங்களும் 11 சதவீதம் சரிந்து சுமார் 10 லட்சம் வண்டிகள் மட்டும் நாடெங்கும் பதிவாகின என்று மத்திய அரசின் போர்ட்டலான வாஹன் தெரிவித்தது. இதில் உழவுக்குப் பயன்படும் டிராக்டர்கள் கூட விதிவிலக்கல்ல, அவற்றின் விற்பனை 13 சதவீதம் குறைந்து காணப்பட்டது. ஆனால் இதுவெல்லாம் 7 லிருந்து 15 நாட்களுக்குள் நடந்த பதிவு. இன்னும் சில நாட்கள் கழித்து தான் தீபாவளி அன்றைக்கு எவ்வளவு வாகனங்கள் விற்பனையாகின என்பது தெரிய வரும்
தீபாவளி பண்டிகையையொட்டி நிறைய வாடிக்கையாளர்கள் கார் மற்றும் சொகுசு வாகனங்களை முன் பதிவு செய்து இருக்கின்றனர். இப்போதைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் வாகனங்கள் இருப்பில் உள்ளது. எட்டிலிருந்து பத்து நாட்களுக்கு டெலிவரி செய்ய போதுமானதாக இருக்கும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். இருசக்கர வாகனங்களில் நிலைமை இன்னும் மோசம் மிகக் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களை வாங்கினர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதில் தப்பி பிழைத்தது உத்தரபிரதேசம் மட்டும்தான், அங்கு 3.5% அதிகமாக வாகனங்கள் விற்பனையானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.