வெளிநாடுகளில் வரிசை கட்டும் இந்திய கார்கள்…
இந்தியாவிலேயே உற்பத்தியாகும் கார்கள் நடப்பாண்டு அதிகளவில் உலகளாவிய சந்தைக்கு வர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டொயோடா, போக்ஸ்வாகன், ஹியூண்டாய், மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவன கார்களின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக மாருதி சுசுக்கி நிறுவனத்தின் கார்களின் ஏற்றுமதி என்பது 2 லட்சத்து 61700 கார்களாக பதிவாகியுள்ளது. இந்திய கார் உற்பத்தி ஒழுங்குமுறை குறியீடு உலகத்தரத்துக்கு உள்ளதாலும், குறைவான உற்பத்தி செலவு, திறமையான பணியாளற்கள் என அனைத்துக்கும் இந்திய கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார்களின் பாதுகாப்பு, கார்பன் உமிழ்வு குறைப்பு உள்ளிட்ட அம்சங்களும் சந்தைக்கு இந்திய கார்களின் ஏற்றுமதியை அதிகரிக்க முக்கிய காரணிகளாக இருக்கிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயில், கார் ஏற்றுமதி என்பது2030ஆம் ஆண்டு 50% ஆக அதிகரிக்கும் என்றார். தற்போது இது 14%ஆக இருக்கிறது. கடந்தாண்டை விட இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் அளவு 4 %அதிகரித்துள்ளது. புதிய சந்தைவாய்ப்புகள், இந்தியாவில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் உள்ளிட்டவை இந்திய சந்தைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட டொயோடா ஹைரைடர் ஹைப்ரிட் ரக எஸ்யுவிகள் கடந்தாண்டு முதல் தென்னாப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல் போக்ஸ்வாகன் உள்ளிட்ட நிறுவனங்களும் வளைகுடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளன. இந்திய கார்களுக்கு நல்லவரவேற்பு வெளிநாடுகளில் கிடைத்தாலும் சீனாவுடன் கடும் போக்குவரத்து நீ்டிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.