அக்டோபர் மாதம் IPO மாதம்
இந்தியாவின் ஆரம்ப பொதுப் பங்குச் சந்தை (IPO) அக்டோபரில் புதிய உச்சத்தை எட்ட உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் 500 கோடி டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகவும் பரபரப்பான பங்கு மையங்களில் ஒன்றான இந்தியாவில், முதலீட்டாளர்களின் ஆர்வம் வலுவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
டாடா கேபிடல் லிமிடெட் மற்றும் எல்ஜி எலக்ட்ரானிகஸின் இந்திய பிரிவின் பல ஆயிரம் கோடி ரூபாய் IPOகள் உட்பட பெரிய அளவு வெளியீடுகள் இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பங்கு சந்தை மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு மற்றும் பலவீனமான கார்ப்பரேட் வருவாய்களினால் பிற ஆசிய சந்தைகள் பின் தங்கயுள்ளன.
வீவொர்க் இந்தியா மேனேஜ்மென்ட் லிமிடெட் அதன் ₹3,000 கோடி ($33.8 கோடி) ஐபிஓவை அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து டாடா கேபிட்டலின் ₹15,500 கோடி பங்கு விற்பனை அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கும். எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்திய பிரிவு அந்த வாரம் சுமார் ₹11,500 கோடி திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவை நிறுவனமான பைன் லேப்ஸ் லிமிடெட், அக்டோபரின் பிற்பகுதியில் ₹6,000 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில் கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.2,500 கோடி ஐபிஓவைத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், அதன் பொது வெளியீட்டிற்கான ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இது அக்டோபர் மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளது.
அதே சமயத்தில் வெளிநாட்டு நிதிகள், IPOகளில் கொள்முதல் செய்யும் அளவும் குறைந்துள்ளது. இந்திய ஐபிஓக்கள் மற்றும் பங்கு வெளியீடுகளில் அவர்களின் முதலீடுகள் 2024 இல் ₹1.2 லட்சம் கோடியாக இருந்து இந்த ஆண்டு ₹43,000 கோடியாகக் குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
ப்ளூம்பெர்க் தொகுத்த தரவுகளின்படி, இந்திய நிறுவனங்கள் 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான IPO-கள் மூலம் சுமார் 1,120 கோடி டாலரை ஏற்கனவே திரட்டியுள்ளன. இந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மேலும் $800 கோடியில் இருந்து $1000 கோடி வரை திரட்ட வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தின் இந்திய பிரிவின் தலைவர் கைலாஷ் சோனி தெரிவித்துள்ளார்
