யுபிஐயில் இருந்து வெளியேறுகிறதா பேடிஎம் வங்கி…?
விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி பேடிஎம் பேமண்ட் வங்கியின் மீது அண்மையில் ரிசர்வ் வங்கி சாட்டையை சுழற்றியது.
இந்நிலையில் குறிப்பிட்ட அந்த பேமண்ட் வங்கி சேவை பாதிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் யுபிஐ தளத்தில் இருந்து வெளியேறும் என்று சந்தையில் தகவல் பரவியது. இந்நிலையில் பேடிஎம் வங்கியின் செயல்பாடுகளால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது. 9 கோடி பயனர்கள் பேடிஎம் யுபிஐ வாயிலாக பேமண்ட் வங்கி செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் , அதாவது 6-ல் ஒருவர்தான் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதே நேரம் மெர்செண்ட் பிரிவில் பேடிஎம் சேவையில் பேடிஎம் பேமண்ட் வங்கியை மட்டும் நம்பாமல் 70 விழுக்காடு அளவுக்கு வணிகர்கள் இருக்கின்றனர். மக்கியூரி கேபிடல் என்ற நிறுவன தரவுகளின்படி பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக குறைந்ததாக கூறப்படுகிறது. பேடிஎம் நிறுவனம் 11 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, அதில் 1 கோடி அளவுக்கு வணிகர்கள் பயன்படுத்தி வருகின்றனராம். ரிசர்வ் வங்கியின் கெடுபிடியால் பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தரவுகளின்படி,25,26 நிதியாண்டில் 60 முதல் 65 விழுக்காடு வரை நிதி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அசுர வேகத்தில் வளர்ந்த பேடிஎம் நிறுவனம், தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் பேமண்ட் கட்டமைப்பில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து உள்ளது.
8கோடியே 10லட்சம் பேடிஎம் வாடிக்கையாளர்கள் பேடிஎம் வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் அவர்கள் பண நிர்வாகம் பிற வங்கிகளில் வைத்திருக்கின்றனர். 1 கோடியே 40 லட்சம் கணக்குகள் உறைநிலையில் கிடக்கின்றன.நடப்பு கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை வெறும் 10 லட்சமாகவே இருக்கிறது. பேடிஎம் நிறுவனத்தின் வாலட்டை 35 கோடி பேர் வைத்திருக்கின்றனர். அதில் 30 கோடி பேரின் கணக்கில் 0 பேலன்ஸ்தான் உள்ளது. 5 கோடி பேரிடம் மட்டும் கடந்த ஓராண்டில் வாலட்டில் பணம் உள்ளது.