கடனை அடைத்து வரும் அனில் அம்பானி..
ரிலையன்ஸ் பவர் என்ற நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி நடத்தி வருகிறார். இவர் ஐசிஐசிஐ,ஆக்சிஸ் மற்றும் டிபிஎஸ் வங்கிகளில் வாங்கியிருந்த கடன்களை அடைத்திருக்கிறார்., 2100 கோடி ரூபாய் அளவுக்கு ரிலையன்ஸ் இன்பிராஸ்டரிக்சர் என்ற நிறுவனத்தின் சொத்துக்களில் ஒரு சிறு பகுதியை ஜேசி பிளவர்ஸ் என்ற சொத்து மறு சீரமைப்பு நிறுவனத்துக்கு எழுதி கொடுத்துள்ளனர். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற ரிலையன்ஸ் பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனம் இன்னும் நிலுவையில் ஐடிபிஐ வங்கியில் மட்டுமே கடன் வைத்துள்து.
400 கோடி ரூபாய் அளவுக்கு 3 நிறுவனங்களுக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கடன் அளித்துள்ளது. இது தொடர்பாக ஜேசி பிளவர்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகும் கடனை திரும்பத் தரவில்லை என்றால் சிறிது கால அவகாசம் தரவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. கடந்த மார்ச் 13 ஆம் தேதி VFSI ஹோல்டிங் நிறுவனம் மூலமாக 240 கோடி ரூபாய் அளவுக்கு ஈக்விட்டியை அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ரிலையன்ஸ் இன்ஃபிரா ஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வாங்கிய கடனை வசூலிக்கும் பொறுப்பை எஸ் வங்கி ஜேசி பிளவர்ஸ் நிறுவனத்திடம் அளித்திருக்கிறது. 48 ஆயிரம் கோடி ரூபாயை அந்நிறுவனம் வசூலிக்க ஏலம் எடுத்துள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 765 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாக கூறியுள்ளது. அதே நேரம் ரிலைன்ஸ் இன்ஃபிராஸ்டர்க்சர் நிறுவனம் இதே காலகட்டத்தில் மொத்த கடன் 4233 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலிலும் இதே பாணியில் கனரா வங்கிக்கும் ரிலையன்ஸ் கடன் அடைத்தது. இதேபோல் VFSI ஹோல்டிங்க்ஸ் முறைப்படி கடந்த செப்டம்பர் 2022-ல் கூட 200மில்லியன் அளவுக்கு பங்குகளை வசூலித்தது. ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனத்தை ஆத்தம் இன்வஸ்ட் மன்ட் நிறுவனம் வாங்கியது. அதில் ரிலையன்ஸ் இன்பிராஸ்டரக்சர் நிறுவனத்தில் 891 கோடியும், ரிலையன்ஸ் பவரில் 152 கோடியும் கடந்த ஆகஸ்ட்டில் முதலீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.