பதவி விலகினார் லியோ பூரி..

டாடா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான லியோ புரி சுதந்திரமான இயக்குநர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக முடிந்த நிலையில், அதனை நீட்டிக்க பூரி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்தும் விலகியிருந்தார். அங்கும் சுதந்திரமான இயக்குநர் பதவியை அவர் வகித்திருந்தார்.. பதவி விலகியுள்ள பூரி ஃபோர்டிஸ் சுகாதார மையத்திலும் தலைமை மற்றும் சுதந்திரமான இயக்குநர் பதவிகளை வகித்து வந்தார். இது மட்டுமின்றி பிரபல நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரியிலும் அவர் சுதந்திரமான இயக்குநராக இருந்து வந்தார். ஐரோப்பிய நிர்வாகத்தை அவர் கவனிக்க வேண்டியிருந்ததால் அதில் ரிஸ்க் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். பொதுவாக ஓவர் போர்டிங் என்பது, ஒரே நபர் பல நிறுவனங்களில் இயக்குநர் பதவியை வகிப்பதை சுட்டிக்காட்டும் சொல்லாகும்.ஒரே நபர் பல நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதன் மூலம், போதுமான கவனத்தை செலுத்த முடியாது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க முடியாத சூழலும் ஏற்படும்.