முதலீட்டாளர்களுக்கு 1.92 லட்சம் கோடி நஷ்டம்…
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை 21ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 888 புள்ளிகள் சரிந்து 66,684புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 19,745 புள்ளிகளாக வர்த்தகக்தை நிறைவு செய்தன. புதுப்புது உச்சங்களை இந்திய சந்தைகள் எட்டி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி வெள்ளிக்கிழமை நீடிக்கவில்லை. Infosys, Tech Mahindra, HCL Technologies, HUL,Reliance Industriesஆகிய நிறுவனங்களின் மதிப்பு கணிசமாக சரிந்தன.L&T, ONGC, NTPC, SBI ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க ஏற்றம்பெற்றன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டும் 4 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளன.உலோகம் மற்றும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் துறைகள் தலா 1 விழுக்காடு சரிவை சந்தித்தன.ICICI Bank, Samvardhana Motherson International, Poonawalla Fincorp, Indiamart Intermesh, L&T, Texmaco Rail & Engineering, Jammu & Kashmir Bank, Rites, Glenmark Pharmaceuticals, Usha Martin, Cupid, Ashok Leyland, Ucal Fuel Systemsஆகிய நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன.
பங்குச்சந்தைகள் போலவே ஆபரணத்தங்கம் விலையும் மீண்டும் சரிந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் சரிந்து 44 ஆயிரத்து560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து 5ஆயிரத்து 570 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 82 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து 82 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. தங்கம் விலை இங்கே குறிப்பிட்டுள்ளதுடன் கட்டாயம் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், செய்கூலியும்,சேதாரமும் கடைகளில் போடுவார்கள் அதையும் சேர்த்தால்தான் உண்மையான தங்கம் விலை கிடைக்கும். இது எல்லா கடைகளிலும் ஒரே மாதிரி இருக்காது. சில கடைகளில் செய்கூலி,சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.