5 வருஷம் 1 லட்சம் கோடி ரூபாய் டார்கெட்..
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவேண்டும் என்பதே அந்த இலக்கு.இதற்கு முன்பு அந்த நிறுவனம் இலக்காக 45 முதல் 50ஆயிரம் கோடி ரூபாயை இலக்காக வைத்திருந்தது.தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. புதிய புதிய வீட்டு உபயோக பொருட்கள் பிஸ்கட்கள்,சிறுதானியங்கள் மற்றும் உலர் பழங்கள் வியாபாரத்திலும் பதஞ்சலி நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. சுயசார்பு இந்தியாவின் ஓர் அங்கமாகவே இந்த நிறுவனம் இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. யுனிலிவர் நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களையும் மிஞ்சியுள்ளதாக கூறியுள்ள ராம்தேவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு பாபா ராம்தேவ் 10,000 கோடி ரூபாய் இலக்கை எட்டுவாரா என்றும்,பாபா அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கேலி செய்வதாக கூறினார்.ஆனால் 20,000 கோடி ரூபாய்க்கு தங்களால் பொருட்களை விற்க முடிந்தது என்றார்.தற்போது அந்த நிறுவனம் டர்ன் ஓவராக 45,000 கோடி ரூபாய் செய்வதாகவும் பாபா கூறினார். 70 கோடி பேர் தங்கள் பொருட்களை வாங்குவதாகவும், அதனை 100 கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறிய பாபா, பதஞ்சலி நிறுவனத்தின் பிஸ்கட் மட்டும் இந்தியாவில் 1,200 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது.இந்தாண்டு 1,500 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பாபா வின் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.