2,000ரூபாயை மாத்த 1 வாரம் டைம்..
2,000ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வரும் 7ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இன்னும் மக்கள் கைவசம் இருக்கும் 2,000ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வரும் 7 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வரும் 8 ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட மாட்டாது என்றும் நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி அவுட்லெட்களில் மட்டுமே மாற்றவோ,டெபாசிட் செய்யவோ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.8 ஆம் தேதிக்கு பிறகு செலுத்தினால் இந்திய அரசின் ஆவணங்களை காட்ட வேண்டியது அவசியமாகும்.ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய இயலும். 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வரும் 7ஆம் தேதிக்குள் வாங்க மறுத்தால் 30 நாட்கள் அவகாசம் வங்கிகளுக்கு தரப்படும்,அப்படியும் வங்கிகள் பதில் தரவில்லை என்றால் பொதுமக்கள் வங்கியின் ஓம்புட்ஸ்மன் பிரிவில் வழக்கு தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2016ஆம் ஆண்டு பண மிதிப்பிழப்பின்போது,500,1000ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் 2,000ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.2018ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த நோட்டுகள் அச்சிடப்படுவது படிப்படியாக குறைந்துவிட்டது.