தேர்தல் பத்திரங்களால் 10.68 கோடி வருவாய்..
அரசியல் கட்சியினருக்கு தனிநபர்களும், கார்பரேட் நிறுவனங்களும் அளித்த தேர்தல் பத்திரங்களின் மூலமாக 10.68 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்களை பணமாக்கும் முயற்சியின்போது கமிஷன் மற்றும் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. 30 கட்டங்களாக 2018 முதல் 204 வரை விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி கமிஷன் மற்றும் பிற கட்டணங்களை வசூலித்தது. 30 கட்டங்களில் 9 ஆவது கட்டத்தில்தான் அதிக கமிஷன் அந்த வங்கிக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த கட்டத்தில் மட்டும் 4607 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. அதற்கு கமிஷன் தொகையாக 1.25 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 4 ஆவது கட்டத்தில் விற்கப்பட்ட 82 பத்திரங்களுக்கு கமிஷனாக வெறும் 1.82 லட்சம் ரூபாய் தொகை மிகக்குறைவாக வசூலிக்கிப்பட்டுள்ளது. பத்திரமாக இருந்து அதை பணமாக மாற்றி முடியாத தொகையை பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி கூறுகிறது. கடந்த 2021-ல் தேர்தல் பத்திரங்களில் 94 பத்திரங்களில் சீரியல் எண்களில் பிழையும் இருந்துள்ளது.
2019-ல் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் 12 145 கோடி ரூபாய் பணம் அரசியல் கட்சிகளுக்கு சென்றுள்ளது. இதில் அதிகபட்சமாக பாஜகவுக்கு மட்டும் 6000 கோடி ரூபாய் சென்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸுக்கு 1351 கோடியும், திரிணாமுல் காங்கிரஸுக்கு 1592 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாததால் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தேர்தல் பத்திரங்கள் உடனடியாக அண்மையில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.