ஒரே வருடத்தில் 10 % சரிவு
இந்திய ரூபாயின் மதிப்பு 2022-ம் ஆண்டில் மட்டும் 10% சரிந்துள்ளது. இந்த அளவு கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய சரிவாகும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த சரிவு காணப்படுகிறது. இந்தாண்டின் கடைசி நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து 82 ரூபாய் 72 பைசாவாக இருந்தது. இது கடந்தாண்டு டிசம்பர் கடைசி வர்த்தக நாளில் 74 ரூபாய்33 பைசாவாக இருந்தது. இந்திய ரூபாயை போலவே ஜப்பானியின் யென் 12% சரிந்தது, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கம், ரஷ்யா உக்ரைன் போர் ஆகியவை இந்திய ரூபாய் பாதிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது. வரும் ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து, மக்கள் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை குறைந்த விலையில் வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தாலும் கூட ஆசிய அளவில் தென்கொரியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் பணத்தின் மதிப்பை விட குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.