ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் 5ஜி செல்..
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது குறித்து அதன் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.அதில் ஒரு பகுதியாக வரும் டிசம்பருக்குள் 10லட்சம் 5ஜி செல்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தற்போது வரை 85% 5ஜி செல்கள் இந்தியாவில் செயல்பாட்டு அளவில் இருப்பதாக கூறியுள்ள அவர்,ஒவ்வொரு 10 விநாடிக்கும் ஒரு 5ஜி செல் இந்தியாவில் இணைக்கப்படுவதாக கூறினார். ஜியோ நிறுவனத்தின் வெற்றி பற்றி பெருமிதம் தெரிவித்துள்ள முகேஷ் அம்பானி, ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியின் அடிப்படையில் 20% வளர்ச்சியை ஜியோ பெற்றிருக்கிறது என்று முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார். கடந்த 9 மாதங்களில் மட்டும் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை பல நகரங்களில் குறிப்பாக 96%நகரங்களை இணைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அதிவேகமாக 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் செய்துவருவதாக முகேஷ் அம்பானி பேசியுள்ளார்.ஒருமாதத்துக்கு 1,100 கோடி ஜிபி அளவுக்கு டேட்டா பரிமாற்றப்படுவதாகவும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். இது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் 45%வளர்ச்சி என்றும் கூறியுள்ளார்.இந்தியாவில் 5 கோடி 5ஜி வாடிக்கையாளர்கள் ஜியோநிறுவனத்துக்கு இருப்பதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.5ஜி செல்போன் சேவை மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கு 1.2 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. கடந்த ஜனவரியில் 5ஜிக்கு மாற 61 ரூபாய் ரீசார்ஜ் பிளானையும் முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார்.இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.