10லட்சம் கோடி ஸ்வாகா..
கத்தியை விட பேனா கூர்மையானது என்பார்கள் அதை நிரூபிக்கும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் சுங்க வரியை குறைப்பதாக கூறப்பட்டது. அதாவது 10 இல் இருந்து 6% ஆக வரி குறைக்கப் பட்டது. இதனால் ஒரே நாளில் 10.7லட்சம் கோடி ரூபாய் தங்க மதிப்பு வீழ்ந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை 14 %உயர்ந்து. இந்நிலையில் தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முயற்சியால் தங்கம் விலை, கடுமையாக வீழ்ந்தது.மேலும் கடத்தல் தங்கம் அளவு குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க தேர்தல் உள்ளிட்ட அம்சங்களால் தங்கம் விலை சரியவே வாய்ப்பு அதிகம் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.