உலகில் சக்தி வாய்ந்த 100 பெண்கள்!!!
உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் என்ற பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பயோகான் நிறுவன தலைவர் கிரன் மஜூம்தார் ஷா, நைக்கா நிறுவனத்தின் நிறுவனர் பல்குனி நாயர், உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பிடித்துள்ளன இந்த பட்டியலில் நிதியமைச்சருக்கு 36வது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த பட்டியலில் நிதியமைச்சர் இடம்பிடித்துள்ளார். கடந்தாண்டு இந்த பட்டயலில் 37வது இடத்தில் நிர்மலா சீதாராமன் இருந்தார். 2019ம் ஆண்டில் 34, 2020ம் ஆண்டு 41வது இடத்திலும் அவர் இந்த பட்டியலில் இருந்தார் நடப்பாண்டு பட்டியலில் எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்னி நாடார் 54வது இடத்திலும் செபியின் தலைவர் மதாபிபுரி புச் 54வது இடத்திலும் உள்ளனர், ஸ்டீல் அதாரிட்டி நிறுவனத்தின் தலைவராக உள்ள சோமா மோண்டால் இந்த பட்டியலில் 67வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் உலகளவில் முக்கியமான நிறுவனங்களின் 39 சிஇஓகள்,10 தலைவர்கள் பெயர்களும் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில்,ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உள்ள உர்சலாவுக்கு முதலிடமும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டியன் லக்ரேட் 2-ம் இடத்திலும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.