10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க இருக்கும் நிறுவனங்கள்..
இந்தியாவின் 11 பிரபல நிறுவனங்கள் இந்த மாதத்தில் ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில் பிரபல JSW நிறுவனத்தின் பங்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 20,000 புள்ளிகளை கடந்திருக்கும் சூழலில் இந்த முதலீடுகள் பெற நிறுவனங்கள் வரிசைகட்டியுள்ளன. இந்தாண்டில் இதுவரை அதிகம் விரும்பப்பட்ட ஐபிஓவாக ஐடியா ஃபோர்ஜ் டெக்னாலஜீஸ் நிறுவனம் திகழ்கிறது. அறிவிக்கப்பட்ட தொகையை விட 160 மடங்கு அதிகம் முதலீடுகளை பெற்றுள்ளது இந்நிறுவனம். Ratnaveer Precision Engineering Ltd. நிறுவன பங்குகள் 94 மடங்கு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது.RR Kabel, Samhi Hotels, Zaggle Prepaid Ocean Services, Yatra Onlineஆகிய நிறுவனங்களும் தங்கள் புதிய ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளன. 4,673 கோடி ரூபாய் முதலீட்டை இந்நிறுவனங்கள் ஈர்க்க திட்டமிட்டுள்ளன. Sai Silks Kalamandir Ltd., Signature Global, and Manoj Vaibhav Gems Ltd.,உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் வாரங்களில் 2140 கோடி ரூபாய் முதலீடுகளை ஐபிஓ வழியாக பெற திட்டமிட்டுள்ளன.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவன ஐபிஓ மட்டும் 2,800 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 25 முதல் 28 ஆம் தேதிக்குள் இந்த ஐபிஓ வெளியாக இருக்கிறது.