ஸ்பைஸ்ஜெட்டில் 1100 கோடி முதலீடு
கடன் சுமையால் சிக்கித்தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பதி ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹரிஹரா மஹாபத்ரா மற்றும் அவரின் மனைவி பிரீத்தி ஆகியோர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 19 விழுக்காடு பங்குகளில் இத்தனை பெரிய முதலீடுகளை செய்ய இருக்கின்றனர்.
கடனில் இருந்து மீண்டுவர புதிய நடவடிக்ககைளை எடுத்து வருவதாக கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் அறிவித்தது.
2254 கோடி ரூபாயை ஜாமினாக திரட்ட இருப்பதாகவும் 320 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை விற்கப்போவதாகவும் அறிவித்திருந்தது. தற்போது ஸ்பைஸ்ஜெட்டின் புரோமோட்டராக அஜய் சிங் என்பவர் இருக்கிறார். இவர் தற்போது அந்நிறுவனத்தில் உள்ள பங்குமதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி 56 விழுக்காட்டில் இருந்து 38.55 விழுக்காடு பங்குகளாக குறையும் என்று தெரிவித்துள்ளார். ஹரிஹரா மகாபத்ரா என்பவர் மும்பையை அடிப்படையாக கொண்டு இயங்கும் தொழிலதிபராவார். அவர்களின் இணைய முகவரிப்படி ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அவர்கள் வேலை செய்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு பிரீத்தி, மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியவராவார். அரசாங்கத்துக்கு தரவேண்டிய டிடிஎஸ் தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை முதலில் செலுத்த இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. 2200 கோடி ரூபாய் முதலீடுகள் வரும்பட்சத்தில் கடன் சுமை வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் பெறப்பட்ட கடனை குறைக்க இந்த முதலீடுகள் உதவும் என்றும் கூறப்படுகிறது.
புதிதாக 200 விமானங்களை போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது வரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சுமார் ஆராயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கிறது. பங்குச்சந்தையில் முதலீடுகள் பெறப்பட்டால் அது கடன் சுமையை வெகுவாக குறைக்கும் என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியுள்ளது.