12 பில்லியன் டாலர் நிதி திரட்டும் போன்பே…
இந்தியாவில் முன்னணி செல்போன் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியாக உள்ள போன்பே தனது வணிகத்துக்காக
ஜெனரல் அட்லாண்டிக் மூலம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் போட்டி நிறைந்த துறையாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் உள்ளன
இந்த நிலையில் போன்பே, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் வருங்காலம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது
போன்பேவுக்கு போட்டியாக முன்னதாக களம் இறங்கிய பேடிஎம் நிறுவனம் வருவாயை ஈட்ட முடியாமல் தவித்து வருகிறது
முதலீட்டாளர்களும் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்து வரும் சூழல் உள்ளது
நிலைமை இப்படி இருக்க போன்பே 12 பில்லியன் டாலர் நிதி திரட்டுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பேடிஎம்மின் வருமானமாக 3 ஆயிரத்து 892 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதேபோல் போன்பேவின் வருவாய்
ஆயிர்த்து 646 கோடி ரூபாயாக உள்ளது
பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றி, பின்னர் அதில் இருந்து விலகிய சமீர் நிகாம் மற்றும் ராகுல் சாரி ஆகியோர் இணைந்து போன்
பே நிறுவனத்தை உருவாக்கினர்
ஒரு மாதத்தில் நடக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் போன்பேவின் பங்கு மட்டும் 47%ஆக உள்ளது.2015-ல் தொடங்கப்பட்ட நிதி நிறுவனம்
2017 முதல் டிஜிட்டல் வடிவில் தங்கம் வாங்கும் முறையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.