அதானி பங்குகள் பிரச்னையால் 12 நிறுவனங்களுக்கு லாபம்..
கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம்,அதானி குழுமத்தின் மீது புகார் ஒன்றை தெரிவித்திருந்தது. இதனால் அதானியின் சாம்ராஜ்ஜியமே ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில் அதானி நிறுவன பங்குகள் கடுமையாக வீழ்ந்த நேரத்தில் அந்த நிறுவன பங்குகளை லாபநோக்குடன் ஏராளமானோர் வாங்கிக்குவித்தனர். இந்த சூழலில் அதானி குழும பங்குகள் வீழ்ந்தபோது முதலீடு செய்து அதில் கொள்ளை லாபம் பார்த்ததாக 12 நிறுவனங்களை அமலாக்கத்துறை பட்டியலிட்டுள்ளது. இது தொடர்பான பட்டியல் பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலையில் ஆய்வு நடத்தினர்.அதில் சிலர் அதானி குழுமம் தொடர்பாக ஜனவரி 24ஆம் தேதிக்கு முன்னதாகவே அதானி குழும பங்குகள் மீது பெட் கட்டியுள்ளனர் என்று அமலாக்கத்துறை செபியிடம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த ஷார்ட் செல்லிங் முறையில் நல்ல பலனடைந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதில் 3 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் என்றும், 4 நிறுவனங்கள் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்தவை என்றும்,பிரான்ஸ், ஹாங்காங்,ஐயர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளும் பயனடைந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறுகிறது.இந்த நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை என்ற என்த தரவுகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் சில நிறுவனங்கள் 2020-ல் தொடங்கப்பட்டு எந்த பரிவர்த்தனையும் செய்யாமல் 2021 வரை இருந்ததாகவும் ,திடீரென கோடிகளை குவித்து பங்குகளை வாங்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறைக்கு குறிப்பிட்டிருக்கிறுது. இந்திய நிறுவனம் ஒன்று 112 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகவும்,9,700 கோடி ரூபாய் லாபம் ஈட்டி, எந்த வருமான வரியும் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த ஒருநிறுவனமும், மும்பையைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமும் அதிக லாபம் அடைந்திருக்கின்றன. இதில் ஒரு நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு பொய்யான தகவல்களை பரப்பியதாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் உச்சநீதிமன்றம் அமைத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவுக்கு அறிக்கை தயாரிக்க ஏற்கனவே அமலாக்கத்துறை உதவியிருந்தது. ஜனவரி 18 முதல் 31 ஆம் தேதி வரை நடந்த பரிவர்த்தனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்துக்கு உதவிய அமலாக்கத்துறை தற்போது செபிக்கும் உதவியாக அறிக்கை தயாரித்து தந்துள்ளது.வெளிநாடுகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு தரகு நிறுவனங்களாகவும் சில நேரங்களில் ஷார்ட் செல்லர்கள் இருப்பார்கள் என்கிறது புள்ளி விவரம்.