ரூ.14,000 கோடி நஷ்டம்…
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஏர்இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் 14,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது.நடப்பு நிதியாண்டில் டாடா குழுமம் 13,000 கோடி ரூபாயை விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.
புதிதகா 470 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தையும் டாடா குழுமம் செய்திருக்கிறது. இதற்கான பணத்தை தவணையில் படிப்படியாக டாடா குழுமம் தர இருக்கிறது. டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கும் சந்திரசேகரன், ஏர் இந்தியா விமானத்தில் வாடிக்கையாளர்களையும், பாதுகாப்பையும் மையப்படுத்தி பணிகளை செய்து வருகிறது. அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார். 470 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்துடன் CFM நிறுவனத்தின் 400 இன்ஜின்களை வாங்க டாடா குழுமம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது தொடர்பாக கடந்தஜூலை மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
210 Airbus A320neo/A321neo ரக விமானங்களும் 190 Boeing 737 MAX family ரக விமானங்களையும் டாடா குழுமம் விரைவில் பறக்கவைக்க இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு முதல் ஏர் இந்தியா நிறுவனம் CFM நிறுவனத்திடம் இருந்து இன்ஜின் வாங்கி வருகிறது.2017 முதல் ஏர் இந்தியா நிறுவனம் A320neoவிமானங்களை இயக்கி வருகிறது. LEAP-1A-powered A320neo family ரக விமானங்கள் தற்போது ஏர் இந்தியாவிடம் 27 விமானங்கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் 30 விழுக்காடு அளவுக்கு சந்தை மதிப்பை பெற ஏர் இந்தியா நிறுவனம் தனது பணிகளை செய்து வருகிறது. தற்போது இருப்பதை விட 3 மடங்கு அதிக விமானங்களை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.