15 ஆயிரம் முதலீடு லாபம் 1 கோடி ரூபாயா..?
சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பம், தகவல் தொழில்நுட்பத்துறையில் பெரிய புரட்சியை செய்திருக்கிறது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்திய நண்பர்கள் இருவர் 15 ஆயிரம் ரூபாய் சாட் ஜிபிடிக்கு செலவு செய்து ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு கருவியை 1 கோடி ரூபாய்க்கும் அந்த குழுவினர் விற்றுத் தள்ளியுள்ளனர். Salvatore Aiello,Monica Powers ஆகிய இருவரும் நண்பர்கள். அமெரிக்க மதிப்பில் 185டாலர்களை முதலீடு செய்தனர். DimeADozen என்ற புதிய செயற்கை நுண்ணறிவு டூலை 1 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
Salvatore Aiello 17 ஆண்டுகளாக பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார்.பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் அவர் வடிவமைத்துள்ளார். இதேபோல் மோனிகா பவர்ஸ் என்பவரும் 15 ஆண்டுகள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவியுள்ளார். கல்வி,செயற்கை நுண்ணறிவு மற்றும் நிதித்துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார். கிளாஸ் டோஜோ என்ற நிறுவனத்தின் வளர்ச்சியில் மோனிகாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். DIME ADOZEN என்ற புதிய நுட்பத்தை இவர்கள் இருவரும் வடிவமைத்த நிலையில், பிசினஸ் ஐடியாக்களை இந்த நுட்பம் தெரிவிக்கும் .66,000டாலர்களைஸஇந்த நுட்பம் சம்பாதித்து தந்துள்ளது. சாட்ஜிபிடியிடம் ஸ்மார்ட்டான கேள்விகளை கேட்டதால் இந்த பணத்தை இருவரும் சம்பாதித்து உள்ளனர்.