கூகுள்,பேஸ்புக்குக்கு 18 வரிவிதிப்பு?
வெளிநாடுகளில் இருந்து தகவல்களை கையாளும் பணிகளை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆங்கிலத்தில் OIDARஎன்று பெயர். இந்த குழுவில் பிரபல நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்தியாவிற்குள் இயங்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இதுவரை இந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வரவில்லை. ஆனால் வரும் 1ஆம் தேதி முதல் இந்த நிறுவனங்கள் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 18விழுக்காடு வரியை செலுத்த வேண்டும்..இது தொடர்பாக மறைமுக வரிகள் வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மேலே குறிப்பிட்ட பிரபல நிறுவனங்கள் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து விளம்பரம்,கிளைவுட் சேவைகள்,ஆன்லைன் கேமிங், இசை, ஆன்லைன் கல்வி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் புதிய வரிகளை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட இந்த சேவைகளை இணைய வழியாக வழங்கிவந்தாலும் அதற்கும் இந்தியாவில் வரி கட்டவேண்டும் என்று அந்த வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. எந்தெந்த பொருட்களுக்கு வரி விதிக்கப்படவேண்டும் என்று நிதிச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் இந்த சேவைகளுக்கு 18 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட இருக்கிறது. பல கல்வி நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இந்த புதிய அறிவிப்பால் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த துறை சார்ந்த நிறுவன அறிவிப்புகள் என்னவாகும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.