189 பில்லியன் சாம்ராஜ்ஜியம்..
பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய அந்நிறுவனத்தின் நிறுவனர் வாரன் பஃபெட்., தனது நீண்ட கால நண்பரான சார்லி மங்கரை நினைவுகூர்ந்தார். 93வயதாகும் வாரன் பஃபெட் தனது 60 ஆவது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்றார். கடந்த 195 ஆம் ஆண்டு பெர்க்ஷைர் நிறுவனத்தை வாரன் வாங்கியிருந்தார். கடந்த நவம்பரில் பேசிய வாரன் பஃபெட்., உடல்நலம் சீராக இருக்கும்போதிலும் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் விளையாடுவதாக தெரிவித்துள்ளார். பெர்க்ஷைர் நிறுவனத்தில் வாரனுக்கு அடுத்ததாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட கிரெக் அபெல் மற்றும் அஜித் ஜெயின் ஆகியோர் மேடையில் இருந்தனர். வாரனின் நீண்டகால நண்பரான சார்லி மங்கர் கடந்த நவம்பரில் 99வயதில் மரணமடைந்தார். எந்த ஒரு பெரிய மாற்றமும் நிகழாதவரை ஆப்பிள் நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வதை நிறுத்த மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார். வாரனின் இந்த பேச்சை கேட்க ஒரு நாள் முன்னதாகவே வந்து கதவு திறந்ததும் வேக வேகமாக சென்று சீட்டை பிடித்த கோடீஸ்வரர்களையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் பெர்க்ஷைர் நிறுவனத்தின் மதிப்பு 23 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 189 பில்லியன் அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ள வாரனின் பெர்க்ஷைர் நிறுவனம், விரைவில் 200 பில்லியன் அமெரிக்கடாலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.