டாடா ஸ்டீலின் 2.1பில்லியன் திட்டம்..
சிங்கப்பூரில் உள்ள ஸ்டீல் ஆலையில் 17,408 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள கடன்களை குறைப்பதற்காகவும், பிரிட்டனில் உள்ள வணிகம் நஷ்டத்தில் தடுக்கவும் இந்த பணத்தை முதலீடு செய்வதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள 565 மில்லியன் அமெரிக்கடாலர் கடனுக்கு நிகராக ஈக்விட்டி பங்குகளாக மாற்றவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் இந்தாண்டே முடியும் என்று கூறப்படுகிறது. Tஸ்டீல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 4367 கோடி ரூபாய் நஷ்டமடைந்திருக்கிறது. இந்நிலையில் கடனை அடைக்க 3,000 கோடி ரூபாயை அந்நிறுவனம் மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கிறது. போர்ட் டல்பாட் என்ற பகுதியில் புதிய மின்சார உருக்கு ஆலையை டாடா ஸ்டீல் நிறுவனம் உருவாக்கி வருகிறது. வழக்கமான எரியூட்டு உருக்கு ஆலைகளை மூடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எரிபொருளால் இயங்கும் ஆலைகளால் 2,800 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் மின்சார உருக்கு ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நிறுவன அறிக்கை கூறுகிறது. இந்த உருக்கு ஆலை 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக கூறப்படுகிறது.