2.11 டிரில்லியன் ரூபாய் டிவிடண்ட் பெறும் மத்திய அரசு..
பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் சூழலில் 2.11 டிரில்லியன் ரூபாய் டிவிடண்ட்டை மத்திய அரசுக்கு அளிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்ட 1.02 டிரில்லியன் ரூபாயைவிடவும் அதிகம் பணம் தர ரிசர்வ் வங்கி இசைவு தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிடவும் அதிக தொகை கிடைப்பதால், மத்திய அரசுக்கு ஒரு சவுகர்யம் ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கில் சில நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை இந்த டிவிடண்ட் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு மேலும் அதிகம் செலவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை4.5விழுக்காடாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 25 நிதியாண்டில் 5.1 விழுக்காடாக இருந்தது. வரும் ஜுன், ஜூலை மாதங்களில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும்போது,மேலும் ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறித்த தரவுகளை மத்திய அரசு மே 31 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. வெளியில் இருந்து மத்திய அரசு வாங்கும் கடனின் அளவு அடுத்த ஆறு மாதங்களில் 7.5 டிரில்லியனாகவும், மொத்த வாங்கும் இலக்கு 14.13 டிரில்லியன் ரூபாயாகவும் குறையும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.