2.25லட்சம் கோடி இழப்பு!!!
இந்திய பங்குச்சந்தைகள் செப்டம்பர் 20ஆம் தேதி மிகப்பெரிய சரிவை சந்தித்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 796 புள்ளிகள் சரிந்து 66800 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 231 புள்ளிகள் சரிந்து 19ஆயிரத்து 901 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்துவது குறித்து தகவல் வெளியான நிலையில்,லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதன் விளைவாக இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ந்தன. முதலீட்டாளர்களுக்கு 2லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. 323லட்சம் கோடி ரூபாயாக இருந்த மொத்த சந்தை மூலதனம் 320 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்தது.HDFC Bank, JSW Steel, Reliance Industries, BPCL ,SBI Life Insurance ஆகிய நிறுவனங்கள் கடுமையாக சரிந்தன.Power Grid Corporation, Coal India, ONGC, Sun Pharma,Eicher Motors ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன.GPT Infraprojects, Axis Bank, Thomas Scott, Indusind Bank, Karnataka Bank, Dhampur Sugar Mills, Union Bank Of India, Tata Consultancy Services, Coal India உள்ளிட்ட 200க்கும் அதிகமான நிறுவன பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. அமெரிக்காவுக்கும்-கனடாவுக்கும் இடையே அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டதும் உலகளவில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் 5550 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாயாகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 78 ரூபாயாகவும் கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 300ரூபாய் குறைந்து 78 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.இந்த விலைகளுடன் நிலையான 3%ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும்,இதேபோல் செய்கூலி,சேதாரமும் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.