முதலீட்டாளர்களுக்கு 2.66லட்சம் கோடி லாபம்..
வாரத்தின் முதல் வர்த்தக நாளான செப்டம்பர் 4ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம் காணப்பட்டது.ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241 புள்ளிகள் உயர்ந்து 65,628புள்ளிகளாக வணிகத்தை முடித்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 19529 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது. மும்பை பங்குச்சந்தையில் Wipro, HCL Tech, UltraTech Cement, Tata Steel உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.M&M, Axis Bank, ITC, Nestle, Asian Paints ஆகிய நிறுவன பங்குகள் சரிந்தன.Nazara Technologiesநிறுவனம் சுமார் 10% ஏற்றம் கண்டது. சந்தை முதலீடு 2.66 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. மொத்த முதலீட்டின் அளவு 315 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2,304பங்குகள் ஏற்றம் கண்டன,1,439பங்குகள் சரிந்தன.198 பங்குகள் பெரிய மாற்றமின்றி தொடர்ந்தன.இந்திய ரூபாயின் சர்வதேச மதிப்பு சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலையும் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாயும், ஒரு சவரன் 120 ரூபாயும் விலை அதிகரித்தது. ஒரு கிராம் தங்கம் 5560 ரூபாயாகவும், 44ஆயிரத்து 480 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி 80 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டிவெள்ளி விலை கிலோ 80 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இந்த விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகிய சேர்க்க வேண்டும். ஆனால் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும், 3%ஜிஎஸ்டி அனைத்து நகைகளுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.